தேவையான பொருட்கள்:
உருளை கிழங்கு (சிறியது) அரை கிலோ
பச்சை பட்டாணி - 2 கப்
வெங்காயம் பெரியது 1;பொடிப் பொடியாக நறுக்கவும்.
பூண்டு 4 பல் (பொடியாக நறுக்கப்பட்டது)
நன்கு பழுத்த புளிப்பான தக்காளி (பெரியது) 2
இஞ்சி ஒரு சிறு துண்டு
பச்சை மிளகாய் 4 (அவரவர் சுவைக்கேற்ப கூடவோ குறைத்தோ எடுத்துக் கொள்ளவும்)
உப்பு தேவையான அளவு
மஞ்சள் பொடி அரை ஸ்பூன்
சாம்பார் பொடி அரை ஸ்பூன்
தாளிக்க:
கடுகு
உளுத்தம் பருப்பு
கடலை பருப்பு
சீரகம்
சோம்பு
செய்முறை:
1. முதலில் உருளை கிழங்கை குக்கரில் வேக வைத்து தோலை நீக்கவும்.
2. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு தாளிக்கவும்.
3. பிறகு அதில் நறுக்கப்பட்ட வெங்காயம், பூண்டு, இஞ்சியை சேர்த்து அத்துடன் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் கண்ணாடி போல் வதங்கியதும் அதில் மஞ்சள், சாம்பார் பொடி சேர்த்து நன்கு கிளறவும்.
4. தக்காளி & பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து அந்தக் கலவையை வதக்கிய வெங்காயத்துடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
5. கலவை நன்கு கொதித்த உடன் வேக வைத்த உருளை கிழங்கையும் அத்துடன் சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.உருளை கிழங்கு உடைந்துவிடாமல் அவ்வப்போது லேசாகக் கிளறிவிடவும்.
6. கடைசியில் சிறிதளவு பட்டை, லவங்கம், ஏலக்காய் இவற்றை நன்கு பொடி செய்து மிகச் சிறிதளவு தூவி கலக்கவும்.
7. பிறகு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

No comments:
Post a Comment