Friday, March 22, 2013

மைக்ரோவேவ் பால்கோவா

தேவையான பொருட்கள்

  • கன்டென்ஸ்ட் மில்க் ஒரு டின் 

  • பால் பவுடர் - 2 மேசைக்கரண்டி
  • வெண்ணெய்  - 80 கிராம் அல்லது நெய்
  • தயிர் - ஒரு மேசைக்கரண்டி


  • செய்முறை

  • முதலில் பால் டின்னை திறந்து மைக்ரோவேவ் கண்ணாடி

  • பாத்திரத்தில்  ஊற்றவும்

  • பிறகு வெண்ணெயை  மைக்ரோ அவனில் லேசாக உருக்கி பாலில்

  • சேர்க்கவும்,

  • பின்பு தயிர், பால் பவுடரை சிறிது சிறிதாக அதில் விட்டு ஒரு கரண்டியால்

  •      கட்டி இல்லாமல் கிளறவும்.

  • பின்பு மைக்ரோ அவனில்5 நிமிடங்கள் வைக்கவும்., பிறகு 3

  •  நிமிடங்களில் வெளியே எடுத்து நன்றாக கிளறவும்,

  • இப்படியே 2 அல்லது 3 முறை செய்ய வேண்டும். .

  • இப்பொழுது லேசாகசிவந்து கடை பால்கோவா நிறத்துடன் காணப்படும்.

  • இப்பொழுது சுவையான பால் கோவா தயார்.
  • பாலக் பனீர்

    தேவையான பொருட்கள்

    பசலைக் கீரை - ஒரு கட்டு

    பனீர் - ஒரு கப்

    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

    மிளகாய் - 2

    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

    நெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    பனீரை சிறிய துண்டுகளாக வெட்டி நெய்யில் வறுத்துக்கொள்ளுங்கள்.

    பசலைக் கீரையை வதக்கிக் கொள்ளவும் . ஒரு வாணலியில் எண்ணெய்

    விட்டு காய்ந்ததும் மிளகாயைத் தாளித்துக் கொள்ளவும் . இதில் அரைத்த

    பசலைக் கீரையைப் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது,

    உப்பு சேர்த்து கலந்து நன்றாகக் கொதிக்க விடவும். பாலக் கிரேவி நன்றாகக்

     கொதித்த பிறகு நெய்யில் பொரித்த பனீர் துண்டுகளை போட்டு பரிமாறவும்..

    மேத்தி புலாவ்

    தேவையான பொருட்கள்

    பாசுமதி அரிசி - 2 கப்

    நறுக்கிய தக்காளி - 2 கப்

    நறுக்கிய வெந்தயக் கீரை - 1 கப்

    நறுக்கிய கொத்தமல்லி - 1 கப்

    புதினா - 1 கப்

    வெங்காயம் - 1 கப்

    தேங்காய்ப்பால் - 1 கப்

    இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

    கரம் மசாலா - 1 டீஸ்பூன்

    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    ஏலக்காய், பட்டை - சிறிதளவு

    கிராம்பு சிறிதளவு

    எண்ணெய் (அ) வெண்ணெய்

    உப்பு தேவையான அளவு.

    செய்முறை

    வாணலியில் அல்லது குக்கரில் வெண்ணெய் உருகியதும், ஏலக்காய், பட்டை,

    கிராம்பு தாளிக்கவும். இதில் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது,

    கீரைகள், கரம் மசாலா, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் போட்டு நன்கு

    வதக்கவும். வதங்கியதும் பாசுமதி அரிசியையும் போட்டு வதக்கி 4 கப்

    தண்ணீர், தேங்காய்பால், உப்பு போட்டு நன்கு கிளறி வேக விடவும். குக்கரில் 2

     விசில் வந்ததும் மேதி புலாவ் பரிமாற ரெடி!

     

    கோதுமை ரவை கேசரி

    தேவையான பொருட்கள்

    கோதுமை ரவை ஒரு கப்

    கண்டன்ஸ்ட் மில்க் ஒரு டின்

    நெய் அரை கப்

    ஏலக்காய் பொடி, முந்திரி, பாதாம் பருப்பு - தேவையான அளவு

    செய்முறை

    முதலில் கோதுமை ரவையை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து எடுத்துத்

     தனியே வைத்துக் கொள்ளவும்.

    பிறகு 2 கப் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு, அதில் இந்த ரவையைப் போட்டு

    சுருண்டு வரும் வரை  நன்கு கிளறவும்.

    பிறகு நெய் மற்றும் கன்டன்ஸ்ட் மில்க்கையும் சேர்த்து

    நெய் பிரிந்து வரும் வரையில்  கிளறவும்.

    பிறகு ஏலம் முந்திரி பாதாம் எல்லாம் சேர்த்து நெய் தடவிய தட்டில் கொட்டி

    ஆறியவுடன் வில்லை போடவும்.


     

    மாம்பழ பர்பி

    தேவையான பொருட்கள்

    மாம்பழச் சாறு - 1 கப்

    பால் பவுடர் - 1/2 கப்

    சர்க்கரை - 2 கப்

    நெய் - 2 டேபிள் ஸ்பூன்

    தேங்காய் துறுவல் - 1 கப்

    ஏலக்காய்த் தூள் - 1 ஸ்பூன்

    செய்முறை

    அடிக்கனமான பாத்திரத்தில் நெய்விட்டு மாம்பழக் கூழைப் போட்டுக் கிளற

    வேண்டும்.

    * கூழ் கெட்டியானதும் இறக்கிவைத்து அதில் தேங்காய்த் துருவல், சர்க்கரை,

    பால் பவுடர் எல்லாம் சேர்த்துக் கிளறி மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான

    தீயில் நன்றாகக் கிளற வேண்டும்.

    * மீதியுள்ள நெய்யை விட வேண்டும்.

    * பாத்திரத்தில் ஒட்டாமல் பொங்கி வரும்போது ஏலக்காய்த் தூளைப் போட்டு

     ஏற்கனவே நெய் தடவிய தட்டில் கொட்ட வேண்டும்.

    * லேசாக ஆறியதும் துண்டுகள் போட வேண்டும்.

    Thursday, March 21, 2013

    இஞ்சி துவையல்



     தேவையான பொருட்கள் 
    • 6 " இஞ்சி துண்டு
    • உளுத்தம் பருப்பு ஒரு கப் (சிறியது)
    • புளி - ஒரு கொட்டை பாக்கு அளவு
    • காய்ந்த மிளகாய் 2
    • உப்பு தேவையான அளவு
    • பெருங்காயம் சிறிதளவு
    • எண்ணெய் -வதக்குவதற்கு

    • செய்முறை
    • செய்முறைவாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பை லேசாக சிவக்கும் படி வறுக்கவும்.
    • பிறகு காய்ந்த மிளகாயையும் பெருங்காயத்தையும் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.
    • பிறகு இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக், அதையும் நன்கு வறுத்துக் கொள்ளவும்.
    • சூடு ஆறிய பிறகு வறுத்த பொருட்களுடன் உப்பு புளி சேர்த்து மிக்ஸியில் நற நற வென்று அரைக்கவும்.

    Note:

    இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிடவோ அல்லது மோர் சாதத்திற்குத் தொட்டுக் கொள்ளவோ மிகவும் நன்றாக இருக்கும். அதிக காரம் சாப்பிடாதவர்கள் சிறிது தேங்காயும் வறுத்து சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.

    காரட் பொரியல் (மைக்ரோவேவ் முறை)



     தேவையான பொருட்கள் 
    • காரட் 5
    • தேங்காய் துருவல் 2 டீ ஸ்பூன்
    • வேக வைத்த் துவரம் பருப்பு 2 டீ ஸ்பூன்
    • உப்பு தேவையான அளவு
    • எண்ணெய் ஒரு ஸ்பூன்
    • கடுகு சிறிதளவு
    • உளுத்தம் பருப்பு கால் டீ ஸ்பூன்
    • காய்ந்த மிளகாய் 1
    • இஞ்சி 2 " (பொடிப் பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் 2
    • கறிவேப்பிலை 5 இலைகள்

    • செய்முறை
    • மைக்ரோவேவ் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு காய்ந்த மிளகாயைப் போட்டு(பாத்திரத்தை மூடி) popcorn mode இல் ஒரு முறை போடவும். பிறகு பொடிப் பொடியாக நறுக்கிய காரட், பச்சை மிளகாய், இஞ்சி, மற்றும் கறிவேப்பிலை இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து,தாளித்த வற்றுடன் நன்கு கலந்து fresh vegitable mode ல் ஒரு முறை போடவும். அடுத்து, வேக வைத்த துவரம் பருப்பை இத்துடன் நாக்கு கலந்து மீண்டும் ஒரு முறை fresh vegitables ல் போடவும். நிறைவாக தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து ஒரு நிமிடம் வைத்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.

    Note:

    பருப்பு சேர்த்து செய்வது என் அம்மாவின் வழக்கம் . இதில் பருப்பு சேர்க்காமலும் செய்யலாம்.பீன்ஸ் , காலி பிளவர், முட்டை கோஸ் என்று தேங்காய் சேர்த்து செய்யும் எந்த பொரியலையும் இந்த முறையில் செய்யலாம்.




    உருளை கிழங்கு பொரியல் (மைக்ரோவேவ் முறை)



    தேவையான பொருட்கள் 
    • உருளை கிழங்கு 4
    • சாம்பார் பொடி ஒரு டீ ஸ்பூன்
    • உப்பு தேவையான அளவு
    • ஒரு சிட்டிகை பெருங்காயம்
    • எண்ணெய் 2 டீ ஸ்பூன்
    • கடுகு கால் டீ ஸ்பூன்
    • உளுத்தம் பருப்பு கால் டீ ஸ்பூன்

    • செய்முறை
    • உருளை கிழங்கை சுத்தம் செய்து தோல் சீவி பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய உருளை கிழங்கை மீண்டும் ஒரு முறை நீர் விட்டு அலசி வடிக்கவும்.
    • ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பைப் போட்டு பாத்திரத்தை மூடி மைக்ரோ வேவில் popcorn mode இல் போடவும். கடுகு நன்கு வெடித்த உடன் உருளை கிழங்கு , உப்பு , சாம்பார் பொடி பெருங்காயம் என அனைத்தையும் போட்டு எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து மைக்ரோவேவில் முதலில் fresh vegitables mode il ஒரு முறை போடவும். பிறகு அதை எடுத்து மீண்டும் கரண்டியால் நன்கு கிளறி விட்டு popcorn mode இல் போடவும்.
    • 10 நிமிடங்களில் சுவையான உருளை கிழங்கு பொரியல் தயார்.

    Note:

    சேப்பங்கிழங்கு, கத்தரிக்காய், வெண்டை காய், என கார கறியாக செய்யும் எந்த பொரியலையும் இந்த முறையில் செய்யலாம்.




    வாழைக்காய் கல்யாண கறி


    தேவையான பொருட்கள் 
    • நன்கு முற்றிய வாழைக்காய் ஒன்று

    • தேங்காய் துருவல் 4 டீ ஸ்பூன்

    • உப்பு தேவையான அளவு

    • மஞ்சள் பொடி கால் டீ ஸ்பூன்

    • தாளிக்

    • 2 டீ ஸ்பூன் எண்ணெய்

    • கடுகு கால் டீ ஸ்பூன்

    • உளுத்தம் பருப்பு கால் டீ ஸ்பூன்

    • காய்ந்த மிளகாய் 2

    • கறிவேப்பிலை ஒரு கொத்து

    • வறுத்து அரைக்க:

    • 2 ஸ்பூன் தனியா

    • ஒரு ஸ்பூன் கடலை பருப்பு

    • அரை ஸ்பூன் சீரகம்

    • ஒரு காய்ந்த மிளகாய்

    • செய்முறை

    • வாழைக்காயை தோல் சீவி சிறிது சிறிதாக (பொடிப் பொடியாக அல்ல) நறுக்கி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து ஒரு விசில் வரும் வரை குக்கரில் போடவும்.

    • பிறகு வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள வற்றை வெறும் வாணலியில் தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும். (கடலை பருப்பு பொன்னிறமாக வேண்டும்.) பிறகு வறுத்த சாமான்களை ரவை போல் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    • அடுத்து தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து அதில், வேக வைத்த வாழைக் காயை வடித்து அதில் போட்டு கங்கு பிரட்டவும். ஒரு நிமிடத்திற்குப் பிறகு வறுத்து வைத்துள்ள பொடியை வாழைக்காயில் தூவி நன்கு கலந்துவிடவும். கடைசியாக தேங்காய் துருவலையும் அதில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

    • இப்போது சூப்பர் கல்யாண கறி ரெடி. பிறகென்ன...ஜாம் ஜாமென்று உள்ளே தள்ள வேண்டியதுதான்.

    Note:

    வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மொத்தமாக அரைத்து பத்திர படுத்தி வைத்துக் கொண்டால் அவ்வப்போது செய்ய எளிதாக இருக்கும்.

    சுரைக்காய் பத்திய கூட்டு

    தேவையான பொருட்கள் 

    • சிறிது சிறிதாக நறுக்கிய சுரைக்காய் இரண்டு கப்
    • பயத்தம் பருப்பு (பாசி பருப்பு) --- அரை கப்
    • தக்காளி ஒன்று
    • மஞ்சள் பொடி கால் டீ ஸ்பூன்
    • கடுகு அரை டீ ஸ்பூன்
    • சீரகம் அரை டீ ஸ்பூன்
    • உளுத்தம் பருப்பு அரை டீ ஸ்பூன்
    • பொடி பொடியாக நறுக்கிய இஞ்சி அரை டீ ஸ்பூன்
    • பச்சை மிளகாய் 2
    • கறி வேப்பிலை ஒரு கொத்து
    • பெருங்காயம் கால் டீ ஸ்பூன்
    • உப்பு தேவையான அளவு
    • எண்ணெய் ஒரு டீ ஸ்பூன்
    • அரை ஸ்பூன் அரிசி மாவு

    • செய்முறை
    • வாணலியில் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், கறி வேப்பிலை பெருங்காயம் எல்லாம் தாளிக்கவும். பிறகு சுரைக்காய் & பொடியாக நறுக்கிய தக்காளியை உப்பும் மஞ்சள் பொடியும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு வேக வைக்கவும். பிறகு நன்கு குழைய வேக வைத்த பயத்தம் பருப்பை அத்துடன் சேர்க்கவும். அனைத்தும் நன்கு வெந்த உடன், அரிசி மாவை 4 தண்ணீரில் கலந்து அதில் கலந்து 2 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
    • (மாவு கரைத்து விடுவதால் கூட்டு அதன் சரியான பதத்தில் அமையும்)




    கல்யாண சாம்பார்


      தேவையான பொருட்கள் 
    • புளி ஒரு எலுமிச்சம் பழ அளவு
    • உப்பு தேவையான அளவு
    • சாம்பார் பொடி அரை ஸ்பூன்
    • துவரம் பருப்பு அரை கப்
    • கத்தரிக்காய் 1
    • காரட் 1
    • குடை மிளகாய் 1
    • உருளை கிழங்கு 1
    • வறுத்து அரைக்க
    • தனியா 3 டீ ஸ்பூன்
    • கடலை பருப்பு 2 டீ ஸ்பூன்
    • சீரகம் ஒரு டீ ஸ்பூன்
    • காய்ந்த மிளகாய் 4
    • பெருங்காயம் சிறிதளவு
    • தாளிக்க
    • கடுகு
    • காய்ந்த மிளகாய்
    • கறி வேப்பிலை
    • எண்ணெய் 3 டீ ஸ்பூன்
    • செய்முறை
    • முதலில் துவரம் பருப்பை குக்கரில் நன்கு குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
    • அடுத்து வருக்கக் கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் (எண்ணெய் சேர்த்தோ சேர்க்காமலோ) அல்லது தனித் தனியே வறுத்து கரகரப்பாக மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
    • பிறகு காய்கறிகளை எல்லாம் சிறிது எண்ணெய் விட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
    • காய் வதங்கிய பிறகு புளி கரைசல், உப்பு மற்றும் சாம்பார் பொடியை அத்துடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
    • சாம்பார் நன்கு கொதித்த உடன் வெந்த பருப்பை அதில் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
    • பிறகு மேற்படி பொடியில் ஒரு ஸ்பூன் தூவவும். . சாம்பார் கொஞ்சம் நீர்க்க இருந்தால் consistancy க்கு சிறிதளவு அரிசி மாவை நீரில் கரைத்து அத்துடன் கலந்து 2  கொதிக்க விடவும். பிறகு தாளித்து சூடாக பரிமாறவும்.

    Note:

    (பொதுவாக பிராமணர்கள் வீட்டுத் திருமணங்களில் வெங்காயம் சேர்ப்பதில்லை. எனவே மேற்படி சாம்பாரில் நான் சேர்க்கவில்லை. மற்றபடி அவரவர் விருப்பப் படி எந்த காய்கறி வேண்டுமானாலும் பயன் படுத்திக் கொண்டு இதே முறையில் செய்யலாம்

    கொள்ளு டயட் சப்ஜி


    தேவையான பொருட்கள் 
    • கொள்ளு ஒரு கப்
    • வெங்காயம் ஒன்று பெரியது
    • நன்கு பழுத்த தக்காளி ஒன்று
    • இஞ்சி இரண்டு இன்ச்
    • பச்சை மிளகாய் இரண்டு
    • பூண்டு 4 பல்
    • மிளகாய் பொடி அரை டீ ஸ்பூன்
    • பட்டை, சோம்பு, தனியா அனைத்தும் சேர்த்து அரைத்த பொடி ஒரு ஸ்பூன்
    • தாளிக்க எண்ணெய் ௨ ஸ்பூன்
    • சீரகம் அரை ஸ்பூன்
    • கொத்தமல்லி சிறிதளவு

    • செய்முறை 
    • கொள்ளை குறைந்தது 4 மணி நேரமாவது வெந்நீரில் நன்கு ஊற வைக்க வைக்க வேண்டும். பிறகு குக்கரில் நான்கு முதல் 5 விசில் வரை விட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
    • வெங்காயம், இஞ்சி பூண்டை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
    • தக்காளியை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
    • இப்போது, முதலில் வாணலியில் என்நீய் விட்டு சீரகத்தை பொரித்துக் கொள்ளவும்.அடுத்து அரைத்து வைத்துள்ள வெங்காயம் இஞ்சி பூண்டு விழுதை அதில் போட்டு பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கவும். பிறகு அதில் தக்காளியையும் கீறிய பச்சை மிளகாயையும் போட்டு, உப்பு, மிளகாய் பொடி மற்றும் மசாலா பொடியையும் போட்டு நன்கு வதக்கவும். கலவை நன்கு வதங்கிய உடன் வேக வைத்த கொள்ளையும் அதில் போட்டு தேவை பட்டால் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
    • பிறகு கொத்தமல்லியை பொடி பொடியாக நறுக்கி அதில் தூவி சப்பாத்தியுடன் சூடாக பரிமாறவும்.

    Note:

    இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது பழமொழி. மெலிந்த உடல் தேற வேண்டுமானால் சாப்பாட்டில் எள் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக எடை கொண்டவர்கள் கொள்ளை சாப்பிட்டால் உடல் சீக்கிரம் இளைக்கும். கொள்ளு மிகவும் சூட்டை கொடுக்கும் தானியவகையாகும். எனவே உடல் கொழுப்பை மிக சீக்கிரம் எரித்துவிடும். எச்சரிக்கை. கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களும் கொள்ளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    பீன்ஸ் பருப்புசிலி (2)



     தேவையான பொருட்கள் 
    • துவரம் பருப்பு அரை கப்
    • கடலை பருப்பு அரை கப்
    • சிவப்பு மிளகாய் 2
    • பீன்ஸ் அரை கிலோ
    • கறிவேப்பிலை ஒரு கொத்து
    • உப்பு தேவையான அளவு
    • பெருங்காயம் ஒரு பின்ச்
    • எண்ணெய் 4 டீ ஸ்பூன்
    • கடுகு கால் டீ ஸ்பூன்

    • செய்முறை 
    • துவரம் பருப்பையும் கடலை பருப்பையும் அரை மணி நேரம் ஊற வைத்து அதிக நீர் சேர்க்காமல் மிக்ஸியில் சிவப்பு மிளகாயையும் உப்பையும் போட்டு கொற கொரப்பாக அரைக்கவும்.
    • அரைத்த மாவை இட்லி தட்டில் வைத்து வேக வைக்கவும்.
    • பொடி பொடியாக நறுக்கிய பீன்ஸையும் நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
    • வேக வைத்த மாவை கட்டி இல்லாமல் நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.
    • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு , பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை தாளித்துக் கொண்டு வேக வைத்த பீன்ஸைப் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பிறகு உதிர்த்து வைத்துள்ள கலவையையும் அத்துடன் போட்டு நன்கு கிளறவும்.
    • சூடாக பரிமாறவும். இது வைத்த குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

    Note:

    இதே முறையில் கொத்தவரங்காய், மற்றும் வாழைப்பூவிலும் செய்யலாம்.

    பீன்ஸ் பருப்புசிலி


    தேவையான பொருட்கள் 
    • துவரம் பருப்பு அரை கப்
    • கடலை பருப்பு அரை கப்
    • சிவப்பு மிளகாய் 2
    • பீன்ஸ் அரை கிலோ
    • கறிவேப்பிலை ஒரு கொத்து
    • உப்பு தேவையான அளவு
    • பெருங்காயம் ஒரு பின்ச்
    • எண்ணெய் 4 டீ ஸ்பூன்
    • கடுகு கால் டீ ஸ்பூன்

    • செய்முறை 
    • துவரம் பருப்பையும் கடலை பருப்பையும் அரை மணி நேரம் ஊற வைத்து அதிக நீர் சேர்க்காமல் மிக்ஸியில் சிவப்பு மிளகாயையும் உப்பையும் போட்டு கொற கொரப்பாக அரைக்கவும்.
    • அரைத்த மாவை இட்லி தட்டில் வைத்து வேக வைக்கவும்.
    • பொடி பொடியாக நறுக்கிய பீன்ஸையும் நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
    • வேக வைத்த மாவை கட்டி இல்லாமல் நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.
    • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு , பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை தாளித்துக் கொண்டு வேக வைத்த பீன்ஸைப் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பிறகு உதிர்த்து வைத்துள்ள கலவையையும் அத்துடன் போட்டு நன்கு கிளறவும்.
    • சூடாக பரிமாறவும். இது வைத்த குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

    Note:

    இதே முறையில் கொத்தவரங்காய், மற்றும் வாழைப்பூவிலும் செய்யலாம்.




    அரைத்துவிட்ட கூட்டு

    தேவையான பொருட்கள்

    கத்தரிக்காய் , சுரை காய், பீன்ஸ்,கத்தரிக்காய் , புடலங்காய், அவரைக் காய்,

    கொத்தவரங்காய், பூசணிக்காய் (இவற்றில் ஏதாவது ஒரு காய் நறுக்கியது 2

    கப் )

    வறுத்து அரைக்க


  • 1 ) கடலை பருப்பு அரை ஸ்பூன்


  • (2 ) தனியா (கொத்தமல்லி விதை) அரை ஸ்பூன்


  • (3 ) காய்ந்த மிளகாய் 1


  • (4 )எண்ணெய் ஒரு ஸ்பூன்


  • (5 )பெருங்காயம் சிறிதளவு

  • வேக வைத்த துவரம் பருப்பு  அரை கப்


  • மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை


  • தேங்காய் துருவல் இரண்டு ஸ்பூன்


  • தாளிக்க: ஒரு ஸ்பூன் எண்ணெய் கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை

  • சிறிதளவு

    செய்முறை

    நறுக்கிய காயை உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்க வேண்டும்.

    காய் நன்கு வெந்த உடன் வேக வைத்த பருப்பை அத்துடன் சேர்க்கவும்.

    பிறகு வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை (தேங்காய் நீங்கலாக)

    எல்லாம் வறுத்து தேங்காயுடன் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு  மிக்சியில்

    கொர கொரப்பாக அரைத்து வேக வைத்த காய் மற்றும் பருப்புடன் சேர்த்து

    மேலும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு தாளிக்கக்

    கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து சூடாகப் பரிமாறவும்.






    ஆப்பிள் மில்க் ஹல்வா

    தேவையான பொருட்கள்

  • ஆப்பிள் ---- 5

  • கன்டன்ஸ்ட் மில்க் ஒரு டின்

  • நெய் ஒரு 100 கிராம்

  • ஏலக்காய் பொடி --- அரை டீ ஸ்பூன்

  • கிராம்பு ---- 5

  • உலர்ந்த திராட்சை ---- 2 டீ ஸ்பூன்

  • முந்திரி --- 10

  • செய்முறை


     
  • முதலில் ஆப்பிளை தோல் சீவி துருவி ஒரு வாணலியில் போட்டு 50 கிராம் நெய் விட்டு அதை நன்கு வதக்கவும்.

  • ஆப்பிள் நன்கு வதங்கியதும் அதில் கன்டன்ஸ்ட் மில்க்கை சேர்த்து ஏலக்காய் பொடியையும் போட்டு நெய் பிரிந்து வரும் வரை நன்கு கிளறவும்.

  • பிறகு மீதியுள்ள நெய்யில் முந்திரி மற்றும் உலர்ந்த திராட்சையை பொறித்து அதில் சேர்த்து சூடாகவோ அல்லது அறை சூட்டிலோ (room temperature) அதை பரிமாறவும்.
  • Note:

    கன்டன்ஸ்ட் மில்க்கிலேயே இனிப்பு இருப்பதால் தனியே சர்க்கரை சேர்க்க வேண்டியதில்லை.

    பிஸி பேளா பாத்

    தேவையான பொருட்கள்

  • வறுத்து அரைக்க:

  • தனியா 3 டீ ஸ்பூன்

  • கடலை பருப்பு ஒரு டீ ஸ்பூன்

  • காய்ந்த மிளகாய் 4

  • எண்ணெய் ஒரு டீ ஸ்பூன்

  • அரிசி ஒரு கப்

  • துவரம் பருப்பு அரை கப்

  • சின்ன வெங்காயம் 10

  •      பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் அரை கப்

  • குடை மிளகாய் 1

  • பீன்ஸ் 1 ௦

  • காரட் 1

  • தக்காளி 2

  • அவரவர்களுக்கு விருப்பமாக காய்கறிகளும் சேர்த்துக் கொள்ளலாம்.

  • துருவிய தேங்காய் 4 ஸ்பூன்

  • புளி ஒரு நெல்லிக்காய் அளவு

  • சாம்பார் பொடி அரை ஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு

  • தாளிக்க

  • கடுகு

  • முந்திரி 10

  • கறிவேப்பிலை ஒரு கொத்து

  • பெருங்காயம் சிறிதளவு

  • செய்முறை:

  • வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள சாமான்களில் தனியா & காய்ந்த மிளகாய் தவிர மற்ற பொருட்களை எல்லாம் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பிறகு தனியாவை வறுக்கவும்.

  • கடைசியாக வாணலியின் சூட்டிலேயே மிளகாயை வறுத்து அனைத்தையும் சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.

  • அரிசியையும் பருப்பையும் களைந்து குக்கரில் நன்கு குழைய  வேக வைக்கவும்.

  • கொடுக்கப் பட்டுள்ள காய்கறிகளை சன்னமாக நறுக்கி, வாயன்ற ஒரு பாத்திரத்தில் தக்காளி நீங்கலாக மற்றவற்றைப் போட்டு தேங்காய் துருவலையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

  •  காய்கள் வாங்கியதும் புளி கரைசலை அதில் சேர்த்து உப்பு மற்றும் சாம்பார் பொடி,தக்காளி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

  •  பிறகு குக்கரில் உள்ள பருப்பு சாதத்தை இத்துடன் சேர்த்து, அரைத்து வைத்துள்ள பொடியையும் மேலே தூவி, நன்கு கிளறவும்.

  • பிறகு கடுகு, முந்திரி, பெருங்காயம், கறிவேப்பிலை  எல்லாம் தாளிக்கவும்.

  • பரிமாறும் பொது சிறிது நெய் கலந்து கிளறி பரிமாறவும்.
  • Note:

    வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் மொத்தமாக (எண்ணெய் சேர்க்காமல்) அரைத்து பத்திர படுத்தி வைத்துக் கொண்டுவிட்டால், சுவையான சாம்பார் சாதம் மிக எளிதாக செய்துவிடலாம்.
     

    ஓட்ஸ் டயட் இட்லி

    தேவையான பொருட்கள்


  • சம்பா கோதுமை ரவை 2 கப்

  • ஓட்ஸ் மாவு ஒரு கப்

  • உப்பு தேவையான அளவு

  • புளித்த தயிர் இரண்டு கரண்டி

  • தாளிக்க:

  • அரை டீ ஸ்பூன் கடுகு

  • அரை டீ ஸ்பூன் உளுத்தம் பருப்பு

  • அரை டீ ஸ்பூன் கடலை பருப்பு

  • பொடி பொடியாக நறுக்கிய இஞ்சி அரை டீ ஸ்பூன்

  • பொடி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் அரை டீ ஸ்பூன்

  • பெருங்காயம் ஒரு சிட்டிகை

  • தாளிக்க இரண்டு ஸ்பூன் எண்ணெய்

  • செய்முறை

  • ஒரு கப் ஓட்ஸை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ளவும்.

  • அதை இரண்டு கப் கோதுமை ரவையில் போட்டு கலந்து புளித்த தயிர்   சேர்த்து தேவையான அளவுக்கு உப்பு போட்டு, சிறிது தண்ணீரும் ஊற்றி இட்லி மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ள வேண்டும்.

  •  கரைத்த மாவில், தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் தாளித்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

  • பிறகு வழக்கமாக இட்லி செய்யும் முறையில் ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சுவையான டயட் இட்லி தயார்.

  • இதை கொத்தமல்லி மற்றும் புதினா சட்னியுடன் சூடாக சாப்பிட மிக நன்றாக இருக்கும்.
  •  

    ஓட்ஸ் டயட் ரொட்டி

    தேவையான பொருட்கள்

  • 3 கப் ஓட்ஸ்

  • ஒரு கப் ஆட்டா மாவு

  • உப்பு தேவையான அளவு

  • செய்முறை

  • ஓட்ஸை நன்கு மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் பொடித்துக் கொள்ளவும்.

  • பிறகு அத்துடன் ஆட்டா மாவையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து, வெந்நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும்.

  • (கவனிக்க: சாதாராணமாக சப்பாத்தி மாவுக்கு ஊற்றும் நீரைவிட சிறிது அதிகமாக ஊற்றி பிசைய வேண்டும்.)

  • பிசைந்த மாவை,ஒரு மூடி இட்ட பாத்திரத்தில் போட்டு அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.

  • பிறகு மெல்லிய சப்பாத்திகளாக இட்டு தோசை கல்லில் போட்டு சப்பாத்தி செய்ய வேண்டும்.

  • சூடாக சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.

  • இதை எந்த சப்ஜியுடனும் சேர்த்து சாப்பிடலாம்.
  • வெஜிடபிள் ஓட்ஸ் உப்புமா

    தேவையான பொருட்கள்  (பரிமாறும் அளவு : 2 persons)


  • ஓட்ஸ் 2 கப்

  • பொடியாக நறுக்கிய வெங்காயம், காரட், முட்டை கோஸ், குடை மிளகாய், முள்ளங்கி...எல்லாம் சேர்த்து ஒரு கப்

  • (அவரவர் விருப்பத்திற்கேற்ப காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்)

  • இஞ்சி 2 இன்ச்

  • பச்சை மிளகாய் 4

  • நன்கு பழுத்த தக்காளி ஒன்று (சிறியதாக இருந்தால் இரண்டு)

  • கறிவேப்பிலை ஒரு கொத்து

  • சீரகம் அரை டீ ஸ்பூன்

  • உளுத்தம் பருப்பு அரை டீ ஸ்பூன்

  • கடலை பருப்பு அரை டீ ஸ்பூன்

  • எண்ணெய் 4 டீ ஸ்பூன்

  • உப்பு தேவையான அளவு

  • செய்முறை

  • ஓட்ஸை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.

  • பிறகு, வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், உளுத்தம் பருப்பு கடலை பருப்பை போட்டு பொரித்துக் கொள்ளவும்.

  •  அடுத்து, பொடியாக நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை மற்றும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

    அனைத்து காய்களும் நன்கு வதங்கிய பிறகு, அத்துடன் பொடி பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.


  • பிறகு வறுத்து வைத்துள்ள ஒட்சையும் அத்துடன் சேர்த்து நன்கு கிளறவும்.

  •  ஓட்ஸை போட்ட உடன் கலவை மிகவும் கெட்டியாகிவிடும். எனவே ஒரு ஸ்பூனால் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்க்க வேண்டும். (4 டீ ஸ்பூனுக்கு மேல் தண்ணீர் சேர்க்க வேண்டாம்) .

  • காய்கறி கலவையுடன் ஓட்ஸ் சேர்ந்து வந்த உடன்...சூடாகப் பரிமாறவும்.

  • (இதற்கு தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை. காலை நேர சிற்றுண்டிக்கு மிகவும் ஏற்ற உணவு இது)

     

    பரங்கிக் காய் (மஞ்சள் பூசணி காய்) அல்வா

    தேவையான பொருட்கள்

  • உரித்த தேங்காய் அளவுள்ள ஒரு பரங்கிக் காய்

  • கன்டன்ஸ்டு மில்க் ஒரு டின்

  • ஒரு கப் பால்

  • இரண்டு தேக்கரண்டி நெய்

  • முந்திரி 10

  • உலர்ந்த திராக்ஷை 20

  • ஏலப்பொடி அரை ஸ்பூன்

  • கிராம்பு 4

  • செய்முறை


  • முதலில் பரங்கிக் காயை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.

  • வாணலியில் நெய்யை விட்டு துருவிய பரங்கிக் காயை நன்கு வதக்கிக் கொள்ளவும்.

  • காய் நன்கு வதங்கியதும் அதில் கன்டன்ஸ்டு மில்க்கை சேர்த்து நன்கு கிளறவும்.

  • கலவை மிக கெட்டியாக இருந்தால் சிறிதளவு பால் சேர்த்துக் கொள்ளவும்.

  • மேற்படி கலவை நன்கு வெந்து அல்வா பதத்திற்கு வந்த உடன் ஏலம் மற்றும் கிராம்புப் பொடி சேர்த்து நன்கு கிளறி முந்திரி மற்றும் உலர்ந்த திராட்சையை நெய்யில் பொறித்து மேலே துவி சூடாகப் பரிமாறவும்.

  • (கன்டன்ஸ்டு மில்க்கிலேயே இனிப்பு இருப்பதால் தனியே சர்க்கரை சேர்க்க வேண்டியதில்லை. தேவையானால் அவரவர் சுவைக்கேற்ப சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளலாம்)

  • (பின் குறிப்பு:  காரட் மற்றும் பீட்ரூட் ஹல்வாக்களையும் இதே முறையில்

    செய்யலாம்.)