தேவையான பொருட்கள்
- துவரம் பருப்பு அரை கப்
- கடலை பருப்பு அரை கப்
- சிவப்பு மிளகாய் 2
- பீன்ஸ் அரை கிலோ
- கறிவேப்பிலை ஒரு கொத்து
- உப்பு தேவையான அளவு
- பெருங்காயம் ஒரு பின்ச்
- எண்ணெய் 4 டீ ஸ்பூன்
- கடுகு கால் டீ ஸ்பூன்
- செய்முறை
- துவரம் பருப்பையும் கடலை பருப்பையும் அரை மணி நேரம் ஊற வைத்து அதிக நீர் சேர்க்காமல் மிக்ஸியில் சிவப்பு மிளகாயையும் உப்பையும் போட்டு கொற கொரப்பாக அரைக்கவும்.
- அரைத்த மாவை இட்லி தட்டில் வைத்து வேக வைக்கவும்.
- பொடி பொடியாக நறுக்கிய பீன்ஸையும் நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
- வேக வைத்த மாவை கட்டி இல்லாமல் நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு , பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை தாளித்துக் கொண்டு வேக வைத்த பீன்ஸைப் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பிறகு உதிர்த்து வைத்துள்ள கலவையையும் அத்துடன் போட்டு நன்கு கிளறவும்.
- சூடாக பரிமாறவும். இது வைத்த குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Note:
இதே முறையில் கொத்தவரங்காய், மற்றும் வாழைப்பூவிலும் செய்யலாம்.