தேவையான பொருட்கள்
- கொள்ளு ஒரு கப்
- வெங்காயம் ஒன்று பெரியது
- நன்கு பழுத்த தக்காளி ஒன்று
- இஞ்சி இரண்டு இன்ச்
- பச்சை மிளகாய் இரண்டு
- பூண்டு 4 பல்
- மிளகாய் பொடி அரை டீ ஸ்பூன்
- பட்டை, சோம்பு, தனியா அனைத்தும் சேர்த்து அரைத்த பொடி ஒரு ஸ்பூன்
- தாளிக்க எண்ணெய் ௨ ஸ்பூன்
- சீரகம் அரை ஸ்பூன்
- கொத்தமல்லி சிறிதளவு
- செய்முறை
- கொள்ளை குறைந்தது 4 மணி நேரமாவது வெந்நீரில் நன்கு ஊற வைக்க வைக்க வேண்டும். பிறகு குக்கரில் நான்கு முதல் 5 விசில் வரை விட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
- வெங்காயம், இஞ்சி பூண்டை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
- தக்காளியை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
- இப்போது, முதலில் வாணலியில் என்நீய் விட்டு சீரகத்தை பொரித்துக் கொள்ளவும்.அடுத்து அரைத்து வைத்துள்ள வெங்காயம் இஞ்சி பூண்டு விழுதை அதில் போட்டு பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கவும். பிறகு அதில் தக்காளியையும் கீறிய பச்சை மிளகாயையும் போட்டு, உப்பு, மிளகாய் பொடி மற்றும் மசாலா பொடியையும் போட்டு நன்கு வதக்கவும். கலவை நன்கு வதங்கிய உடன் வேக வைத்த கொள்ளையும் அதில் போட்டு தேவை பட்டால் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
- பிறகு கொத்தமல்லியை பொடி பொடியாக நறுக்கி அதில் தூவி சப்பாத்தியுடன் சூடாக பரிமாறவும்.
Note:
இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது பழமொழி. மெலிந்த உடல் தேற வேண்டுமானால் சாப்பாட்டில் எள் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக எடை கொண்டவர்கள் கொள்ளை சாப்பிட்டால் உடல் சீக்கிரம் இளைக்கும். கொள்ளு மிகவும் சூட்டை கொடுக்கும் தானியவகையாகும். எனவே உடல் கொழுப்பை மிக சீக்கிரம் எரித்துவிடும். எச்சரிக்கை. கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களும் கொள்ளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment