தேவையான பொருட்கள்
- காரட் 5
- தேங்காய் துருவல் 2 டீ ஸ்பூன்
- வேக வைத்த் துவரம் பருப்பு 2 டீ ஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் ஒரு ஸ்பூன்
- கடுகு சிறிதளவு
- உளுத்தம் பருப்பு கால் டீ ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் 1
- இஞ்சி 2 " (பொடிப் பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் 2
- கறிவேப்பிலை 5 இலைகள்
- செய்முறை
- மைக்ரோவேவ் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு காய்ந்த மிளகாயைப் போட்டு(பாத்திரத்தை மூடி) popcorn mode இல் ஒரு முறை போடவும். பிறகு பொடிப் பொடியாக நறுக்கிய காரட், பச்சை மிளகாய், இஞ்சி, மற்றும் கறிவேப்பிலை இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து,தாளித்த வற்றுடன் நன்கு கலந்து fresh vegitable mode ல் ஒரு முறை போடவும். அடுத்து, வேக வைத்த துவரம் பருப்பை இத்துடன் நாக்கு கலந்து மீண்டும் ஒரு முறை fresh vegitables ல் போடவும். நிறைவாக தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து ஒரு நிமிடம் வைத்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.
Note:
பருப்பு சேர்த்து செய்வது என் அம்மாவின் வழக்கம் . இதில் பருப்பு சேர்க்காமலும் செய்யலாம்.பீன்ஸ் , காலி பிளவர், முட்டை கோஸ் என்று தேங்காய் சேர்த்து செய்யும் எந்த பொரியலையும் இந்த முறையில் செய்யலாம்.
No comments:
Post a Comment