தேவையான பொருட்கள்
சம்பா கோதுமை ரவை 2 கப்
ஓட்ஸ் மாவு ஒரு கப்
உப்பு தேவையான அளவு
புளித்த தயிர் இரண்டு கரண்டி
தாளிக்க:
அரை டீ ஸ்பூன் கடுகு
அரை டீ ஸ்பூன் உளுத்தம் பருப்பு
அரை டீ ஸ்பூன் கடலை பருப்பு
பொடி பொடியாக நறுக்கிய இஞ்சி அரை டீ ஸ்பூன்
பொடி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் அரை டீ ஸ்பூன்
பெருங்காயம் ஒரு சிட்டிகை
தாளிக்க இரண்டு ஸ்பூன் எண்ணெய்
செய்முறை
ஒரு கப் ஓட்ஸை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ளவும்.
அதை இரண்டு கப் கோதுமை ரவையில் போட்டு கலந்து புளித்த தயிர் சேர்த்து தேவையான அளவுக்கு உப்பு போட்டு, சிறிது தண்ணீரும் ஊற்றி இட்லி மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ள வேண்டும்.
கரைத்த மாவில், தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் தாளித்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு வழக்கமாக இட்லி செய்யும் முறையில் ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சுவையான டயட் இட்லி தயார்.
இதை கொத்தமல்லி மற்றும் புதினா சட்னியுடன் சூடாக சாப்பிட மிக நன்றாக இருக்கும்.
செய்முறை
No comments:
Post a Comment