Thursday, March 21, 2013

வெஜிடபிள் ஓட்ஸ் உப்புமா

தேவையான பொருட்கள்  (பரிமாறும் அளவு : 2 persons)


  • ஓட்ஸ் 2 கப்

  • பொடியாக நறுக்கிய வெங்காயம், காரட், முட்டை கோஸ், குடை மிளகாய், முள்ளங்கி...எல்லாம் சேர்த்து ஒரு கப்

  • (அவரவர் விருப்பத்திற்கேற்ப காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்)

  • இஞ்சி 2 இன்ச்

  • பச்சை மிளகாய் 4

  • நன்கு பழுத்த தக்காளி ஒன்று (சிறியதாக இருந்தால் இரண்டு)

  • கறிவேப்பிலை ஒரு கொத்து

  • சீரகம் அரை டீ ஸ்பூன்

  • உளுத்தம் பருப்பு அரை டீ ஸ்பூன்

  • கடலை பருப்பு அரை டீ ஸ்பூன்

  • எண்ணெய் 4 டீ ஸ்பூன்

  • உப்பு தேவையான அளவு

  • செய்முறை

  • ஓட்ஸை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.

  • பிறகு, வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், உளுத்தம் பருப்பு கடலை பருப்பை போட்டு பொரித்துக் கொள்ளவும்.

  •  அடுத்து, பொடியாக நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை மற்றும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

    அனைத்து காய்களும் நன்கு வதங்கிய பிறகு, அத்துடன் பொடி பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.


  • பிறகு வறுத்து வைத்துள்ள ஒட்சையும் அத்துடன் சேர்த்து நன்கு கிளறவும்.

  •  ஓட்ஸை போட்ட உடன் கலவை மிகவும் கெட்டியாகிவிடும். எனவே ஒரு ஸ்பூனால் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்க்க வேண்டும். (4 டீ ஸ்பூனுக்கு மேல் தண்ணீர் சேர்க்க வேண்டாம்) .

  • காய்கறி கலவையுடன் ஓட்ஸ் சேர்ந்து வந்த உடன்...சூடாகப் பரிமாறவும்.

  • (இதற்கு தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை. காலை நேர சிற்றுண்டிக்கு மிகவும் ஏற்ற உணவு இது)

     

    1 comment:

    1. எல்லாரும் ஒரு கப் ஓட்ஸுக்கு 2 கப் தண்ணீர் விட்டு, மூடி வேக வைக்கச் சொல்கிறார்கள். நீங்கள் 4 ஸ்பூன் தண்ணீர் போதுமென்று எழுதியிருக்கிறீர்கள். ஓட்ஸ் எளிதில் வேகாது என்று சொல்வதுண்டு. மேல் விளக்கம் ஏதும் உண்டா?

      ReplyDelete