தேவையான பொருட்கள்
- புளி ஒரு எலுமிச்சம் பழ அளவு
- உப்பு தேவையான அளவு
- சாம்பார் பொடி அரை ஸ்பூன்
- துவரம் பருப்பு அரை கப்
- கத்தரிக்காய் 1
- காரட் 1
- குடை மிளகாய் 1
- உருளை கிழங்கு 1
- வறுத்து அரைக்க
- தனியா 3 டீ ஸ்பூன்
- கடலை பருப்பு 2 டீ ஸ்பூன்
- சீரகம் ஒரு டீ ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் 4
- பெருங்காயம் சிறிதளவு
- தாளிக்க
- கடுகு
- காய்ந்த மிளகாய்
- கறி வேப்பிலை
- எண்ணெய் 3 டீ ஸ்பூன்
- செய்முறை
- முதலில் துவரம் பருப்பை குக்கரில் நன்கு குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து வருக்கக் கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் (எண்ணெய் சேர்த்தோ சேர்க்காமலோ) அல்லது தனித் தனியே வறுத்து கரகரப்பாக மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
- பிறகு காய்கறிகளை எல்லாம் சிறிது எண்ணெய் விட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- காய் வதங்கிய பிறகு புளி கரைசல், உப்பு மற்றும் சாம்பார் பொடியை அத்துடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- சாம்பார் நன்கு கொதித்த உடன் வெந்த பருப்பை அதில் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- பிறகு மேற்படி பொடியில் ஒரு ஸ்பூன் தூவவும். . சாம்பார் கொஞ்சம் நீர்க்க இருந்தால் consistancy க்கு சிறிதளவு அரிசி மாவை நீரில் கரைத்து அத்துடன் கலந்து 2 கொதிக்க விடவும். பிறகு தாளித்து சூடாக பரிமாறவும்.
Note:
(பொதுவாக பிராமணர்கள் வீட்டுத் திருமணங்களில் வெங்காயம் சேர்ப்பதில்லை. எனவே மேற்படி சாம்பாரில் நான் சேர்க்கவில்லை. மற்றபடி அவரவர் விருப்பப் படி எந்த காய்கறி வேண்டுமானாலும் பயன் படுத்திக் கொண்டு இதே முறையில் செய்யலாம்
No comments:
Post a Comment