தேவையான பொருட்கள்
- உருளை கிழங்கு 4
- சாம்பார் பொடி ஒரு டீ ஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- எண்ணெய் 2 டீ ஸ்பூன்
- கடுகு கால் டீ ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு கால் டீ ஸ்பூன்
- செய்முறை
- உருளை கிழங்கை சுத்தம் செய்து தோல் சீவி பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய உருளை கிழங்கை மீண்டும் ஒரு முறை நீர் விட்டு அலசி வடிக்கவும்.
- ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பைப் போட்டு பாத்திரத்தை மூடி மைக்ரோ வேவில் popcorn mode இல் போடவும். கடுகு நன்கு வெடித்த உடன் உருளை கிழங்கு , உப்பு , சாம்பார் பொடி பெருங்காயம் என அனைத்தையும் போட்டு எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து மைக்ரோவேவில் முதலில் fresh vegitables mode il ஒரு முறை போடவும். பிறகு அதை எடுத்து மீண்டும் கரண்டியால் நன்கு கிளறி விட்டு popcorn mode இல் போடவும்.
- 10 நிமிடங்களில் சுவையான உருளை கிழங்கு பொரியல் தயார்.
Note:
சேப்பங்கிழங்கு, கத்தரிக்காய், வெண்டை காய், என கார கறியாக செய்யும் எந்த பொரியலையும் இந்த முறையில் செய்யலாம்.
No comments:
Post a Comment